வேதாந்தாவின் உதவி

சுற்றுச்சூழலை பாதிப்பதாக நடந்த போராட்டங்களால் மூடப்பட்டுள்ள, துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவக்குவதற்கு வேதாந்தா குழுமம் முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, கடந்தாண்டில் ரூ. 201 கோடியை நிறுவனம் செலவிட்டுள்ளது. தற்போது, மேலும் ரூ.150 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நகரங்களில், 700 படுக்கை வசதியுள்ள தற்காலிக மருத்துவமனைகள் செயல்படுத்தப்படுகின்றன. அவை 1,000 படுக்கை வசதிகளாக மேம்படுத்தப்படும். 10 நகரங்களில், 1,000 படுக்கை வசதிகள் உடைய தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படும்.அந்தந்த நகரங்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இணைந்து, இவற்றில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு இந்த மருத்துவமனைகள் இயங்கும்’ என கூறப்பட்டுள்ளது.