ஹார்டுவேர் ஏற்றுமதி

ஐ.டி ஹார்டுவேர் துறையில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.டி ஹார்டுவேரில் உள்நாட்டு உற்பத்தி, பெரிய முதலீடுகள் ஈர்ப்பதை அதிகரிப்பதற்கான திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஊக்குவிப்பு ஒதுக்கீடு ரூ.7,325 கோடி. லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் தயாரிப்பு இத்திட்டத்தின் இலக்கு பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளன. இந்நிறுவனங்களுக்கு 1 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை ஊக்குவிப்புத் தொகையை நான்கு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும். இதனால் 1,80,000 நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும். இத்திட்டம் ஐ.டி ஹார்டுவேரின் உள்நாட்டு மதிப்பு கூட்டுதலுக்கு உந்துதல் அளிக்கும். 2025ம் ஆண்டுக்குள் தயாரிப்பு 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.