ஐ.எப்.எப் அமைப்பின் பின்புலம்

பாரத மக்களின் பேச்சு, தனியுரிமை போன்ற சுதந்திரங்களுடன் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு தன்னார்வ அமைப்பு, இன்டர்நெட் பிரீடம் பவுண்டேஷன் (ஐ.எப்.எப்). பாரத அரசு சமீபத்தில் அறிவித்துள்ள புதிய இணைய, ஊடக விதிமுறைகள் குறித்து இந்த அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஷேர்சாட், டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களிடம் இருந்து பெருமளவு நன்கொடை வந்துள்ளது. இதன் அறங்காவலர் ரக்ஷிதா தனேஜா தனது கார்ட்டூனில் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்திருந்தார். மேலும், இவர், ‘கிரீன்பீஸ் இந்தியா’வின் முன்னாள் சமூக ஊடக அதிகாரி. பாரதத்தின் நலன்களுக்கு எதிரான செயல்பாட்டின் காரணமாக இந்நிறுவனம் நிதி நடவடிக்கைகளில் ஈடுபட தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பின்னணி, ஐ.எப்.எப் நடுநிலையான அமைப்பு அல்ல என்பதை தெளிவாகிறது.