ஐந்து மாநில தேர்தல்கள் தரும் சங்கதி

சுதந்திரம் அடைந்தது முதல் கவனிக்கப்படாமல் பின் தங்கியிருந்த வடகிழக்கு மாநிலங்கள் பா.ஜ.க ஆட்சியில் தேசிய நீரோட்டத்தில் இணைந்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. எனவே, பத்து வருடங்களுக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்டு வந்த இந்த வடகிழக்கு மாநிலங்கள் அவர்களின் உண்மை முகத்தை அறிந்து ஒதுக்கிவிட்டனர் என்பதையே அசாமில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி எடுத்துக்காடுகிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சியை மிகக் குறுகிய காலத்தில் அடைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளும் அவர்களுடன் இணைந்த காங்கிரசும் முற்றிலுமாக காணாமல் போய்விட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் தமிழகத்தில் வென்றதுகூட முழுக்க முழுக்க தி.மு.க தயவினால் மட்டுமே என்பது அவர்களுக்கே தெரியும். கேரளத்தில் பெரிய இடர்பாடுகள் இருந்தாலும் பா.ஜ.க அங்கு நல்ல வாக்கு வங்கியை பெற்று வருகிறது. அங்கு சபரிமலை விவகாரம் உட்பட ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் பல்வேறு அடக்குமுறைகள் காரணமாக காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்ட்டுகள்கூட பலர் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளனர். இதனாலேயே கம்யூனிஸ்ட்டுகள் அங்கு மீண்டும் ஜெயித்துள்ளனர்.