தமிழக தேர்தல் கொடுத்துள்ள சில படிப்பினைகள்

தமிழக மக்கள் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பது கமலின் மக்கள் நீதி மைய்யத்தின் தோல்வி எடுத்துக்காட்டுகிறது. சீமானின் வளர்ச்சி சற்றே கவனிக்கத்தக்கது. அவர் தனியாக நின்றாலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். அவரது தனித்தமிழ் நாடு போன்ற சில பிரிவினை கோஷங்கள் மக்களிடம் எடுபடவில்லை. ஆனால் இது தொடர்வது தேச நலனுக்கு ஆபத்தாக முடியும். எனவே அவர் அதனை விடுத்து தேசிய நீரோட்டத்தில் இணைவது அனைவருக்கும் நல்லது. தே.மு.தி.க கடந்த சில தேர்தல்களில் எடுத்த தவறான முடிவுகளால் மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அ.ம.மு.க கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிந்தே களம் கண்டது. அதன் ஒரே எண்ணம் அ.தி.மு.க வாக்குகளை பிரிக்க வேண்டும், அ.தி.மு.கவை கைப்பற்ற வேண்டும் என்பதே. அதற்கு துணை போன ஐ.ஜே.கே, ச.ம.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான விலையை கொடுத்துள்ளன. அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை முஸ்லிம்களே நிராகரித்துள்ளனர் என்பது மிக நல்ல விஷயம்.