தேர்தலில் வன்முறை திட்டம்

‘விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவும், எதிர்கட்சிகளின் தலைவர்களைக் கொல்லவும் மேற்கு வங்கத்தில், பெட்ரோல் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு போன்ற பலவிதமான வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பாகிஸ்தானின் அல்கொய்தாவின் தளம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது. தேர்தல் காலத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட வாய்ப்புகள் அதிகம். எனவே அமைதியான முறையில் தேர்தல்களை நடத்துவது பாதுகாப்புப் படையினருக்கு ஒரு சவாலாக இருக்கும்’ என சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது. இதற்கு உதாரணமாக இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங்கின் அலுவலக வளாகத்தில் திரிணாமுல் குண்டர்கள் சுமார் ஒரு டஜன் கச்சா குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.