தி.மு.கவின் லட்சணம்

ஈரோடு, டி.என்.பாளையத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், முதல்வருக்கு திடீரென அருந்ததியினர் மீது பாசம் வந்து, பொல்லானுக்கு சிலை, மணி மண்டபம் அமைப்பதாக தேர்தலுக்காக அறிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார். கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட அருந்ததியர் உள் இடஒதுக்கீடு பற்றி பெருமையாக பேசிய ஸ்டாலின், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி அந்தியூர் செல்வராஜை, மேடையின் கீழே அமர வைத்து அருந்ததியர் சமூகத்தினர் மீதான தங்களது உண்மையான பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் ஸ்டாலின். பொதுவாக அவரது இது போன்ற கூட்டத்தில், மேடையின் ஒரு மூலையில், அந்தந்த மாவட்டச் செயலரை, ஒரு சாதாரண சேரில் அமர வைப்பார் ஸ்டாலின். மேடையிலும், மேடைக்கு கீழேயும் யாரையும் அமர வைப்பதில்லை. ஆனால் அந்தியூர் செல்வராஜை அவர் நடத்திய விதம் அருந்ததியர் சமூகத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.