முஸ்லிம்களை வஞ்சிக்கும் தி.மு.க

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராஹிம் பேசினார். அப்போது அவர், ‘இனம், மதம், மொழி பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும். தி.மு.கவினர் நினைத்திருந்தால், கோவை குண்டு வெடிப்பை தடுத்திருக்கலாம். முஸ்லிம்களை தொடர்ந்து வஞ்சிப்பது தி.மு.கதான். தி.மு.க., உடன் இன்று கூட்டணி வைத்திருக்கும் ஜவஹிருல்லா, அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் முன்னர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்திருந்தனர். தி.மு.கவை அகற்ற வேண்டும் என முன்பு பேசிய இவர்கள், இன்று தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர். எம்.எல்.ஏ சீட்டுக்காக இவர்கள் முஸ்லிம்களை அடகு வைக்கின்றனர். ‘ஹஜ்’ பயணத்துக்கு உதவித் தொகை உயர்வு, உலமாக்களுக்கு மானியம் என பல்வேறு சலுகைகளை வழங்கியது அ.தி.மு.க அரசுதான். மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் நாட்டில் எந்த கலவரமும் நடைபெறவில்லை. பா.ஜ.க தேசத்துக்கான கட்சி. மக்கள் நலன் காக்கும் கட்சி நம்மை பிரிப்பவர்கள் யார், நமக்கு எதிரி யார், நம்மை யார் தவறாக வழி நடத்துகின்றனர் என்பது குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். என்று கூறினார்.