கிரிப்டோ கரன்சி மசோதா

கடந்த 2018ல் ரிசர்வ் வங்கி மெய்நிகர் நாணயங்கள் எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்தது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த தடையை நீக்கியது. மாநிலங்களவையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், ‘கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கோ, செபி அமைப்புக்கோ இல்லை. இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. அதன்அடிப்படையில் புதிய  மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது. அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு அது சட்டமாக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதனிடையே, ‘டெஸ்லா’ மின்சாரக்கார் தயாரிப்பு நிறுவனம்,  ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் விண்வெளி நிறுவனம் உள்ளிட்டவற்றின் தலைவர் எலான் மஸ்க் கடந்த ஜனவரியில், மெய்நிகர் நாணயமான, ‘பிட்காயின்’ மீது, 10, 950 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். பணம் கொடுப்பதற்கு பதிலாக, பிட்காய்ன் செலுத்தி, டெஸ்லா காரை வாங்கும் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.