வாரத்தில் நான்கு நாள் வேலை

மத்திய அரசின் தொழிலாளர், வேலை வாய்ப்பு துறை சார்பில், தொழிலாளர் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி, ஒரு வாரத்தின் வேலை நாட்களை, நான்கு நாட்களாக குறைத்து கொள்ளலாம். இதை, சுய விருப்பத்தின் அடிப்படையில், நிறுவனம், தொழிலாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு நான்கு நாட்கள் வேலை நாட்களாக இருக்கையில், மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். இந்த புதிய விதிகளின்படி, நான்கு, ஐந்து அல்லது ஆறு நாட்கள், வேலைநாட்களாக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு வாரத்தில், 48 மணி நேர பணி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கான வரைவு விதிகள் தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதன் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களும், தங்கள் தொழிலாளர் விதிகளை மாற்றி வருகின்றன.