காலிஸ்தானில் 40 கோடி விளம்பரம்

அமெரிக்காவில், சூப்பர் பவுல் எனப்படும் கால்பந்துப் போட்டி பிரபலம். அமெரிக்க தொலைக்காட்சிகளில் அதிக பார்வையாளர்கள் கொண்ட நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் 30 நொடி விளம்பரம் வெளியிடுவதற்கு கட்டணம் ரூ. 40 கோடி. கலிபோர்னியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள், பாரதத்தின் விவசாய சட்டங்களை எதிர்த்து இந்த நிகழ்ச்சியில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் டிவிட்டர் பதிவு பாரதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட சில நாடுகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோர் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.