கோடையை தடுக்க கொடை தந்த தம்பதிகள்

கோவையில் ஏ.சி வசதி செய்யப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஏ.சியை பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்தால் கொரோனா சிகிச்சை பெறும் 700க்கும் அதிகமான நோயாளிகள் கோடை வெயிலால் படும் கஷ்டத்தை கண்டு மனம் வருந்திய கோவை ராம்நகர் நேரு வீதியை சேர்ந்த ராஜேஷ் ரேவதி தம்பதியினர் தங்கள் நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 100 மின்விசிறிகளை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இவர்களின் இந்த நல்லெண்னத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டுவோம்.