ஹத்ராஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹத்ராஸ் வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச சிறப்பு காவற்படை (எஸ்.டி.எப்) தாக்கல் செய்துள்ளது. இதில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்களான அதிக்-உர்-ரஹ்மான், பத்திரிகையாளர் சித்திக் கப்பன், மசூத் அஹ்மத், ஆலம், அன்ஷாத் பத்ருதீன், ஃபிரோஸ் கான், டேனிஷ் மற்றும் ரவூப் ஷெரீப் ஆகியவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இந்த விவகாரத்தில், கலவரத்தைத் தூண்ட, மஸ்கட் மற்றும் தோஹா வங்கிகள் வழியாக ரூ. 80 லட்சம் நிதி பெற்றுள்ளனர் என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலைபேசிகள், மடிக்கணினிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் பி.எப்.ஐ டெல்லி, உத்தரபிரதேச அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் உறுதிப்படுத்துகின்றன. மே 1ல் இதன் மீதான அடுத்த விசாரணை நடக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.