ஆம் அத்மி எம்.எல்.ஏ மீது வழக்கு

தஸ்னா தேவி கோயிலின் தலைமை பூசாரியான யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, பிரஸ் கிளப் ஆப் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்களை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக இழிவு படுத்துவதை குறித்து பேசுகையில், ‘முஸ்லீம்கள் முகமதுவின் யதார்த்தத்தை அறிந்து கொண்டால், அவர்கள் ஒரு முஸ்லீம் என்று கூற வெட்கப்படுவார்கள்’ என்று கூறியிருந்தார். இதற்காக ‘அவரது நாக்கு மற்றும் கழுத்தை வெட்டி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தியச் சட்டம் இதைச் செய்ய எங்களை அனுமதிக்கவில்லை’ என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பாரதத்தில் மத மோதல்கள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள அமானத்துல்லா கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா உத்தரபிரதேச காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். டெல்லி காவல்துறையயும் அமானத்துல்லா கான் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-ஏ / 506 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.