ஸ்டாலின் சொந்த ஊரில் கொண்டாட்டம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதையொட்டி, அவரது சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராமத்தில் உள்ள மக்கள் பேனர் வைத்து தோரணங்கள் கட்டி கொண்டாடியுள்ளனர். ஸ்டலினின் மூதாதையர்கள் நாகஸ்வர வித்வான்களாக ஓங்கோல் அருகே இருந்த பெள்ளூரு சமஸ்தானத்தில் வெங்கடகிரி அரசரிடம் பணியாற்றினர். அப்போது பெள்ளூரு சமஸ்தானம் சார்பில் இவர்கள் குடும்பத்திற்கு 30 ஏக்கர் நிலத்தை மானியமாக வழங்கியது அதில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். வறட்சி ஏற்பட்ட காரணத்தால் நிலத்தை விற்றுவிட்டு ஆந்திராவை விட்டு, தஞ்சாவூருக்கு ஸ்டாலினின் குடும்பத்தினர் இடம் பெயர்ந்தனர். இன்றும்கூட இவர்களுடைய மூதாதையரின் குடும்பத்தார் செருவு கொம்ம பாளையத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது ஊரை சேர்ந்த ஸ்டாலின் தமிழக முதல்வராகி இருப்பது எங்கள் ஊருக்கே பெருமை என அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.