திடீர் சர்ச்

பண்ருட்டி அருகில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியை அடுத்த செடுத்தான்குப்பத்தில் புதியதாக சர்ச் ஒன்று கட்டப்பட்டது. இதனை எதிர்த்து ஹிந்து முன்னணி உட்பட ஹிந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். அதில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக சர்ச் கட்டப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கட்டடத்தில் உள்ள  அனைத்து மத சின்னங்களையும் அகற்றுகிறோம், அங்கு மேற்கொண்டு எந்த விதமான மத வழிபாடும் இனிமேல் மேற்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்தனர். இதனால் தற்காலிகமாக அங்கு நடைபெற்ற மக்கள் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.