பி.எஸ்.என்.எல் டி.சி.எஸ் ஒப்பந்தம்

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது 4 ஜி தளங்களை அமைக்க டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திற்கு ரூ. 550 கோடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம், பாரதம் முழுவதும் 6,000 4ஜி தளங்களை டிசிஎஸ் அமைக்கும். இதுகுறித்து பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளது. இது நமது பாரதப் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் பாரதத்திலேயே உருவாக்கப்பட்டது. இது ஒரு முக்கிய நெட்வொர்க், முழு தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் கூடிய ரேடியோ நெட்வொர்க்கை கொண்டுள்ளது. நமது 4ஜி நெட்வொர்க்கின் வளர்ச்சி உலகளவில் பாராட்டப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.