வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை, கோயில் விவகாரம், ஒலிப்பெருக்கி உள்ளிட்ட சில சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியது. தகவலின் பேரில் காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் பள்ளிகளுக்கு விரைந்து சென்று வளாகம் முழுவதும் சுற்றி வளைத்தனர். மாணவர்களையும் வெளியேற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரிகிறது. எனினும், இந்த மின்னஞ்சலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கான விசாரணைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.