பிரவீன் நெட்டாருவின் கனவை நனவாக்கிய பா.ஜ.க

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பா.ஜ.க இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு, தங்களுக்கு என்று ஒரு புது வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக, கர்நாடக பா.ஜ.க, பெல்லாரே கிராமத்தில் உள்ள நெட்டாரில் அவரது குடும்பத்தினருக்கு என அழகிய வீடு ஒன்றை கட்டித் தந்துள்ளது. அதன் கிரகப் பிரவேசம் சமீபத்தில் நடத்தப்பட்டது. பிரவீன் நெட்டாருவின் குடும்ப உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த வரைபடத்தில் 2,700 சதுர அடியில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. 70 லட்ச ரூபாயில் பா.ஜ.கவால் கட்டப்பட்ட வீட்டிற்குள் பிரவீன் நெட்டாருவின் குடும்பத்தினர் பூஜை செய்து பால் காய்ச்சி குடியேறினர். மணிலா ஸ்ரீதாமாவின் ஸ்ரீ மோகன்தாஸ் சுவாமிகள், ‘பிரவீன் நிலையம்’ என்ற அந்த வீட்டின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து ஆசி வழங்கினார். இந்த விழாவில், பா.ஜ.க மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்க பிரபாகர் பட் உட்பட ஏராளமான பா.ஜ.க பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டாவும் அவர்களது வீட்டுக்குச் சென்றார்.

வீட்டின் முன் பகுதியில் பிரவீன் நெட்டாருவின் சிலையும் கர்நாடக பா.ஜ.கவால் நிறுவப்பட்டது. முன்னதாக, கடந்த நவம்பர் 2ம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில பா.ஜ.க தலைவருமான நளின் குமார் கட்டீல் இந்த வீட்டிற்கு அடிக்கல் நாட்டினார். முதல்வர் பசவராஜ் பொம்மையும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு, வீடு கட்ட தனது சார்பாக, 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார். கர்நாடக மாநில பா.ஜ.க சார்பில் ரூ. 25 லட்சமும், பாஜக யுவமோர்ச்சா சார்பில் ரூ. 15 லட்சமும் வழங்கப்பட்டது. பிரவீனின் குடும்பத்தினருக்கும் கட்சி சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவிக்கும் வேலை வழங்கப்பட்டது. முன்னர் அதே இடத்தில் இருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு  இந்த புதிய வீடு பல நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது.

முன்னதாக, பிரவீனின் சிலையை திறந்து வைத்து பேசிய நளின் குமார் கடீல், “பிரவீன் நெட்டாருக்கு சொந்தமாக பல கனவுகள் இருந்தன, ஆனால் அவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். ஒரு தொண்டர் பலிகடா ஆக்கப்பட்டபோது, ஒட்டுமொத்தக் கட்சியும் அவருக்கு ஆதரவாக நின்றது. அவரது கனவுகளில் ஒன்றான வீடு கட்டும் கனவு பாதியில் நின்றுவிட்டது. அந்த கனவை நனவாக்க நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவாதித்தோம். அவரது குடும்பத்திற்கு தேவையான முழு நிதி பலத்தையும் புகுத்தும் பணியை கட்சி செய்துள்ளது. பிரவீன் தான் செய்த கட்சிப் பணிகளுடன் குடும்பத்தையும் வளர்த்து வந்தார். பிரவீன் கொலைக்குப் பிறகு, அவரது கொலையாளிகளுக்கு பதில் சொல்ல முடிவு செய்தோம். கொலைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்தபோது, பி.எப்.ஐ பயங்கரவாத அமைப்பை ஒடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, வழக்கு என்.ஐ ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு வழக்குகளில் சுமார் 400 பி.எப்.ஐ ஆட்கள் என்.ஐ.ஏ’வால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரவீனின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்துள்ளோம்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கல்லாட்கா பிரபாகர் பட், “பிரவீன் பா.ஜ.கவை எல்லா இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று விரும்பினார். முஸ்லிம் மதவெறிக்கு மத்தியில் பிரவீன் கொலை நடந்தது. இதற்காக ஒரு தேசபக்தர் கொல்லப்பட்டார். இப்படியே விட்டால் இது தொடரும். இந்த தேர்தலில் தேசபக்தி உள்ளவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். பிரவீன் பா.ஜ.கவுக்கு தனது ஆதரவை வழங்க உறுதி எடுத்தார். ஹிந்து மதத்தைப் பொறுத்தவரை, வீடு என்பது சமஸ்காரம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் மதிப்பின் புனித மையம். ஆனால், ஹிந்துத்துவாவை ஒடுக்க வேண்டும் என மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹிந்துத்துவாவை நசுக்குவதன் மூலம் இந்தியாவை நசுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்துக்கள் இதை எதிர்கொண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

பிரவீன் நெட்டாருவின் கனவை கட்சி நிறைவேற்றியது என கபில் மிஸ்ரா டுவீட் செய்துள்ளார், “மிகவும் உணர்ச்சிகரமான தருணம் பிரவீன் நெட்டாருவின் குடும்பத்திற்கு இப்போது ஒரு புதிய வீடு உள்ளது, இந்த காரணத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.” என தெரிவித்தார். பிரவீன் நெட்டாருவின் குடும்பத்திற்கு உதவ கபில் மிஸ்ரா தனி நிதி சேகரிப்பையும் நடத்தி வந்தார். இந்த நிதி திரட்டல் Crowdkash என்ற இணையதளத்தில் உள்ளது. நிதி திரட்டும் பிரச்சாரம் ரூ. 25 லட்சத்தை வசூலிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடையாளர்கள் இதில் பங்களித்துள்ளனர். முன்னதாக, ராஜஸ்தானில் முஸ்ளிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி தையல் கடைக்காரர் கன்னையா லாலின் குடும்பத்திற்காக இதேபோன்ற நிதி திரட்டும் திட்டத்தை கபில் மிஸ்ரா நடத்தினார். இதில் ஒரு நாளில் ரூ. 1 கோடி நிதி திரட்டப்பட்டு, இறந்த கன்னையா லாலின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.