கோயிலில் ஆங்கிலேயர்களின் செப்புப் பட்டயம்

தமிழகத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளையும், செப்புப் பட்டயங்களையும் பராமரித்து நூலாக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட சுவடித் திட்டப் பணிக் குழுவினர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் செப்பு பட்டயம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். கோயில் சுவரின் முன்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ள அந்த செப்பு பட்டயத்தில், கட்டபொம்மனை கொலை செய்தது குறித்து கும்பினியர்கள் (ஆங்கிலேயர்) விளம்பரம் செய்த வரலாற்று தகவல் இடம் பெற்றுள்ளது. 20 ஆகஸ்ட் 1799ல் இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது. அதனை அங்கு வைத்தவர் ஆங்கிலேயர்ர்களின் ராணுவ படைத் தளபதி மேஜர் பானர் மேன். அந்த பட்டயத்தில், கட்டபொம்மன் மர்றும் அவருடன் கொல்லப்பட்டவர்கள் பெயர்கள் அடங்கிய விவரங்கள், பாளையங்களில் உள்ள கோட்டைகள் இடித்து அழிக்கப்பட்டது, பாளையக்காரர்கள், சில முக்கிய பிரமுகர்களை கைது செய்து சென்னைக்கு அனுப்பியது போன்ற தகவல்களும் பாளையக்காரர்கள், குடிமக்கள் யாரும் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவற்றை வைத்திருக்ககூடாது, அப்படி வைத்துள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், ஆங்கிலேயர்கள் வகுக்கும் அனைத்து சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.