பா.ஜ.க சீட்டு மறுப்பு

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடியின் மகள் சோனல் மோடி. இவர் நியாய விலைக் கடை வைத்திருக்கிறார். குஜராத் நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அகமதாபாத் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வேட்பாளராகக் கோரிய பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் சோனல் மோடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் குஜராத் பா.ஜ.க  அறிவித்தது.  பிரதமரின் அண்ணன் மகளாக  அல்லாமல் பா.ஜ.க தொண்டராகவே தான் தேர்தல் டிக்கெட்டை கோரியதாகக் கூறினார் சோனல் மோடி. மேலும், ‘எனக்கு டிக்கெட் கிடைக்காவிட்டாலும், அர்ப்பணிப்புள்ள தொண்டராக கட்சியில் சுறுசுறுப்பாக இருப்பேன்’ என்று தெரிவித்தார். பிரஹலாத் மோடியும் தனது மகளின் முடிவை ஆதரித்தார். ‘என் குடும்பம் நரேந்திர மோடியின் பெயரை சுயநலனுக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லை. நாங்கள் அனைவரும் எங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறோம். நானும் கூட ஒரு ரேஷன் கடை நடத்துகிறேன். மோடி பிரதமரான பிறகு நானோ என் பிள்ளைகளோ அவரின் பங்களாவுக்கு கூட சென்றதில்லை’ என்று பிரஹலாத் மோடி கூறியிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இதை காங்கிரஸ், தி.மு.க,  இதர பிற குடும்பக் கட்சிகளுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகிறார்கள்.