தலைவர் பேச்சை கேட்காத உடன் பிறப்புகள்

“தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன். “நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும். இது தி.மு.க தலைமையில் அமைந்த அரசு என்றாலும், இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல. எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத, எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு. எனவே தி.மு.கவைச் சார்ந்தவர்கள் மாற்றுக் கட்சியினரோடு நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்குத் தீர்வு காண முயல வேண்டும். தமிழகத்தைத் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்னுடைய ஆசை” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் கட்சி உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், உடன்பிறப்புகள் அவரின் பேச்சை கேட்பதாக தெரியவில்லை. சமீபத்தில், காவலர்களுக்கே இந்த நிலமை என்றால் பொதுமக்களுக்கு? என்ற கேள்வியோடு, காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் காவல்துறையினரை, ‘இன்னும் 5 வருடத்திற்கு நாங்கள்தான். உங்களால் ஒன்றும் செய்யமுடியாது’ மரியாதை இல்லாமல் ஏகவசனத்தில் உடன்பிறப்பு ஒருவர் திட்டி மிரட்டும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. போதாதகுறைக்கு அந்த ஆசாமி மாஸ்க்கூட அணியவில்லை.  இதனைத்தவிர அம்மா உணவகம், அம்மா மினிகிளினிக் என அவர்கள் செய்த அடாவடிகளை உலகறியும். உடன்பிறப்புகளின் இந்த செயலால் முதல்வருக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர்தான் ஏற்படுகிறது. எனவே, தகுந்த நடவடிக்கை எடுத்து, உடனடியாக இவர்களை அடக்கி நல்லாட்சி தருவார் ஸ்டாலின் என நம்புவோம்.