வளர்ச்சியில் பாரதம்

குஷ்மேன் & வேக்ஃபீல்டின் 2021 அறிக்கையின்படி, உலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி பாரதம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  இதில் வழக்கம்போல சீனா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 3ம் இடத்தை பெற்றுள்ளது. கொரோனா தொற்றுநோயின் தாக்கம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிவிட்டது. பாரதமும் அதில் இருந்துத் தப்பவில்லை. எனினும்,  அந்த சூழலைப் பயன்படுத்தி பாரதம் ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்து உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. பாரதத்தின் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக, பாரதத்தின் மக்கள் தொகை, அதில் புதுமையான திறன்களைக் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை, தொழில் உற்பத்திக்கு சாதகமான அரசியல் சூழல், நிலையான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற செயல்திறன் மிக்க அரசு, சாதகமான வணிகச் சூழல், வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசின் கொள்கைகள், வளர்ந்து வரும் உள்கட்டமைப்புகள், குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரி, விநியோகச் சங்கிலித் திறன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை போன்ற அரசின் திட்டங்கள், மலிவான நிலம், உழைப்பு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விதிகள் தளர்வு, எளிய வருமான வரி, முன்னோடியான  ஜி.எஸ்.டி வரிகள்  போன்ற பல்வேறு காரணிகளும் பாரத்த்தின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன.  மேலும், உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சாதனை படைத்த ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஸ்கில் இந்தியா’ போன்ற முயற்சிகளை அரசு அறிமுகப்படுத்தியது.