இட ஒதுக்கீடு தடையில்லை

வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, எந்த தடையும் இல்லை. உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை. இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை பணி நியமனங்கள் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்தனர். பின்னர், இவ்வழக்கை செப்டம்பர் 14க்கு ஒத்திவைத்தனர்.