பகவத் கீதை இ – புத்தகம்

திருச்சியில் உள்ள திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் சுவாமி சித்பவானந்தர், பகவத் கீதைக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்க உரைகளை எழுதியுள்ளார். இந்த இரண்டு புத்தகங்களும் 18 பதிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சுவாமி சித்பவானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அப்புத்தகத்தின் 19வது ஆங்கில பதிப்பின் விளக்க உரை முதன் முறையாக இ – புத்தகமாக வெளிவர உள்ளது. இதனை பாரதப் பிரதமர் மோடி இன்று காலை 10:30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சி கரூர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லுாரி சார்பில் இணையதளம் வழியாக தொகுத்து வழங்கப்படுகிறது என திருப்பராய்த்துறை தபோவன செயலர் சுவாமி சத்தியானந்தா கூறியுள்ளார்.