அமெரிக்காவில் தாமரை மலருமா?

சமீபத்தில் இலங்கையில் ‘இலங்கை பா.ஜ.க’ என்ற கட்சி துவக்கப்பட்டது. அதற்கும் பாரதத்தில் உள்ள பா.ஜ.கவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் பா.ஜ.கவின் தேவை எவ்வளவு அவசியம் என்பதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது. அதுபோல, கடந்த ஆகஸ்ட் 2020ல், அமெரிக்காவில் ‘பா.ஜ.கவின் வெளிநாட்டு நண்பர்கள்’ (OFBJP-USA) என்ற அமைப்பு துவங்கப்பட்டது. இதில் தற்போது பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹேரியின் மனைவியான மேகன் மார்க்கெல் விரைவில் இணைவார். அவர் அடுத்த 2024 தேர்தலில் கமலா ஹேரிஸுக்கு எதிராக தேர்தலில் பா.ஜ.க சார்பாக களம் காண்பார். இதனால்தான் மார்க்ல், ஓப்ரா வின்ஃப்ரே உடனான தனது நேர்காணலில் தாமரை மலர் வரையப்பட்ட ஹார்மனி ஆடையை அணிந்திருந்தார் என்ற ஒரு உறுதி செய்யப்படாத தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னர் ஒருமுறை ‘அமெரிக்காவை சூழ்ந்துள்ள இருள் மேகங்கள் கலைந்து சூரியன் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது. அப்போது அங்கு தாமரை மலரும்’ என கூறியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.