இஸ்ரோவின் அதி நவீன ரேடார்

பாரத விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து ‘நிசார்’ செயற்கைகோளை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த உள்ளது. இதில், ‘எல் பேண்டு, எஸ் பேண்டு’ ரேடார்கள் முதன் முறையாக பொருத்தப்பட உள்ளன. இதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்ட ‘எஸ்.ஏ.ஆர்., ரேடார்’ சாதனம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரேடார் சாதனங்களை நாசா, அதன் ரேடார் சாதனத்துடன் இணைத்துப் பொருத்தி, மீண்டும் பாரதத்திற்கு அனுப்பும். பணிகள் முடிந்ததும், இந்த நிசார் செயற்கைகோள் அடுத்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்.