சமஸ்கிருதத்தை பரிந்துரைத்த அம்பேத்கர்

அம்பேத்கரின், 130வது பிறந்த நாளின்போது, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், புதிய கட்டட துவக்க விழாவில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உள்ளிட்டோர், இணையம் வழியாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பாப்டே பேசும்பொழுது, ‘நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் மொழிக்கும், பணியின்போது நாம் பயன்படுத்தும் மொழிக்கும் நீண்ட நாட்களாக உள்ள முரண்படு உள்ளது. இதை அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்தர். எனவே, அவர் சமஸ்கிருதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக அறிவிக்க பரிந்துரைத்தார். வடமாநிலத்தவர்கள், தமிழை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென்மாநிலத்தவர்கள், ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார். சமஸ்கிருதத்திற்கு இரு பகுதிகளிலும் பெரும் எதிர்ப்பு இருக்காது என்பதால் இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் அது வெற்றி பெறவில்லை’ என்று பேசினார்.