மீண்டும் ஸ்டாலின் வீடு முற்றுகை

தஞ்சாவூரில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதும் பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள், ஏ.பி.வி.பி மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன. இந்நிலையில், மாணவி தற்கொலைக்கு நீதிகேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டை, ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனையடுத்து ஏ.பி.வி.பி அமைப்பின் தேசிய நிர்வாகிகள் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அடாவடியாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை மாலையில் விடுவிக்காமல், வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிப்ரவரி 28ம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.பி.வி.பி மாநில நிர்வாகிகள்,  கைதுசெய்யப்பட்ட ஏ.பி.வி.பி நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஸ்டாலின் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால் மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம். நாடு முழுவதும் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏ.பி.வி.பி குரல் கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.