சிலம்பப் போட்டியில் சாதனை

சர்வதேச சிலம்ப போட்டிகள் நேபாளில் நடைபெற்றது. பல நாடுகளில் இருந்து சுமார் 2,000 பேர் இதில் பங்கேற்றனர். சிலம்பாட்டம், மான்கொம்பு, வேல் கம்பு, சுருளாட்டம், ரெட்டை கை கம்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் இருந்து அனைத்து சிலம்ப கூடங்களின் கூட்டமைப்பில் பயிற்சி பெற்ற 38 மாணவர்கள் இப்போட்டிகளில் கலன்டுகொண்டு தங்கம் வென்றனர்.  60 தங்கம், 60 வெள்ளி, 60 வெண்கலப் பதக்கங்கள் கொண்ட இந்த போட்டியில் மொத்தமாக 38 தங்கப் பதக்கங்களை தமிழக மாணவர்கள் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என இவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.