தமிழக அரசை கண்டித்து தேசம் தழுவிய போராட்டம்

தஞ்சை மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடிய ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும், லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டும், மதமாற்றத்தை தடுக்கக் கோரியும், மதமாற்றத் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் பாரதமெங்கும் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ஸ்டாலின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. அவ்வகையில் நேற்று ஆந்திராவின் குண்டூர், நெல்லூர், விசாகபட்டிணம், டெல்லி, ராஜஸ்தானில் உள்ள சித்தூட், பிராஜ், ஜெய்பூர் உத்தர பிரதேசத்தின் கான்பூர், காசி, மீரட், குர்காபூர், லக்னோ, சத்தீஷ்கர், பீகார் மகாராஷ்டிரவின் விதர்பா, பஞ்சாப், உத்ராஞ்சல், குஜராத், தெலுங்கானா, அந்தமான் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் காதுகளில் இந்த செய்திகள் சென்று சேருமா, நடவடிக்கை எடுக்குமா, ஹிந்துக்களுக்கு விடிவு கிடைக்குமா?