அ.தி.மு.கவுக்கு அட்வைஸ்

அ.தி.மு.க. தன் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுவது கட்சிக்கு நல்லது. அ.தி.மு.கவில் சினிமாவில் இல்லாத ஒருவர் இவ்வளவு தூரம் சாதித்திருப்பது பெரிய விஷயம். பல இடங்களில் அ.தி.மு.க கூட்டணி சொற்ப வித்தியாசத்தில்தான் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, மக்களுக்கு அ.தி.மு.க கூட்டணி மீது வெறுப்பு இல்லை. மாறாக, ஒரு மாற்றம் வேண்டும் என எதிர்பார்த்து மட்டும்தான் மக்கள் இம்முறை தி.மு.கவிற்கு வாக்களித்துள்ளனர் என தெரிய வருகிறது. வரும் காலத்தில் சிறந்த எதிர்கட்சியாக செயலாற்றி மக்கள் அபிமானத்தை பெற்றிடுங்கள். எதிர்கால வெற்றிக்கு வித்திடுங்கள். அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். மக்கள் நலனுக்கே என்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தோல்வி தரும் பாடம் போல் யாரும் நமக்கு வாழ்க்கைப்பாடம் தருவதில்லை.