எல்.1 புள்ளியை நோக்கி பயணத்தை தொடங்கிய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ அசத்தல்

சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்.1-ஐ நோக்கி இந்தியாவின் ஆதித்யா விண்கலம் இன்று (செப்.19) அதிகாலை 2 மணிக்கு  இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்.1 புள்ளிக்கு ஆதித்யா விண்கலம் இன்று செலுத்தப்பட்டது. இந்த பாதையில் விண்கலம் 110 நாட்கள் பயணம் செய்து எல்.1 புள்ளியை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.