ஒரு கர்மயோகி அமரரானார்

நமது சனாதன தர்மத்தின் பொக்கிஷங்களான ராமாயணம்,  மஹாபாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை, மற்றும் இதிகாச, புராணங்களை பாமர மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே 1923ல் ஆரம்பிக்கப்பட்டது கோரக்பூர் கீதா பிரஸ். மிகக்குறைந்த விலையில் பாரதீய மொழிகளில் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள புத்தகங்கள் கோடிக்கணக்காண குடும்பங்களை சென்றடைந்துள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் ‘கல்யாண்’ எனும் ஆன்மீக மாதாந்திரப் பத்திரிகை 1926 முதல் வந்து கொண்டிருக்கிறது. 1982 முதல் ‘கல்யாண்’ மாத இதழின் ஆசிரியராகவும் கீதா பிரஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து சிறப்பாக தொண்டாற்றிய திரு. ராதேஷ்யாம் கேம்கா கடந்த 2 ஏப்ரல் 2021ல் வாரணாசியில் காலமானார். வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்த கர்மயோகி அவர். ராதேஷ்யாம் கேம்காவின் மறைவுக்கு நமது அஞ்சலிகளை செலுத்திடுவோம்.