345 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிஜம் இன்று நாடகக் கலைப் படைப்பாக

பாரத நாட்டில் மிகுந்த சோதனையான காலகட்டத்தில் வந்துதித்த வீரன். தாய்த்திருநாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட தன் வாழ்வை அர்ப்பணித்த ஒப்பற்ற மன்னன் சிவாஜி. இவருடைய வாழ்க்கை மராட்டிய மாநிலத்தில் அனைவருக்கும் மனப்பாடம்.

நாடெங்கும் பரவிய பெரும்புகழ்.

ரவீந்திரநாத் தாகூர், பிரதிநிதி மற்றும் சிவாஜி உத்சவ் என்ற கவிதைகளின் வாயிலாக அந்த மன்னனின் வாழ்க்கை ஆங்கிலேய அரசுக்கு எதிரான சுதந்திரப் போர்ககாலத்தில் நமக்கு எவ்வாறு பொருந்தும் என்கிறார்.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பதிராய் 1896 ஆம் ஆண்டில் கராச்சி நகரில் உருது மொழியில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.

நம்மூர் மகாகவி பாரதியார், சிவாஜிதன் இன்று படித்தாலும் அனைவருக்கும் வீரத்தையும் கடமையையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும்.

மக்களின் அரசன்

மராத்திய எழுத்தாளர் ஷிவ்சாஹிர் பாபாசாஹேப் புரந்தரே, சிவாஜியின் வாழ்க்கை சரிதத்தை ஜனதா ராஜா (மக்களின் அரசன்) என்ற பெயரில் நாடகவடிவில் 1985ல் புனே நகரில் அரங்கேற்றினார். அதன் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல நாடகங்களிலும் 120 முறைக்கும் அதிகமாக மேடையேறியுள்ளது இந்நாடகம். இது ஆசியாவிலேயே முதலாவதானதும் உலகின் இரண்டாவதானதும் ஆன பிரும்மாண்டமான மேடை நாடகம். ஹிந்த்வி ஸ்வராஜியம் என்ற நம் நாட்டின் சனாதன தர்மத்தின் அடிப்படையில் நல்லாட்சி நடத்தியவன்.

அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

* 250 கலைஞர்கள்,

* விஸ்தாரமான மேடை

*நேரடியாகப் பங்குகொள்ளும் பாடகர்களும் இசைக் கருவி கலைஞர்களும்.

*மேடையில் உயிரோடு தோன்றும் யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் மாட்டு வண்டிகளும் பல்லக்குகளும்.

ஹிந்தி மொழியில் நாட்டின் தலைநகரில்:

இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்முயற்சியின் விளைவாய் சமீபத்தில் ஏப்ரல் 6 முதல் 16 வரை டில்லி செங்கோட்டையில் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு இதே நாடகம் “ராஜா சிவ சத்திரபதி: வரலாற்று பெருமை மிக்க காதை” என்ற பெயரில் 3 மணி நேர நாடகமாக நடந்தேறியுள்ளது.

ஏன் இந்த முயற்சி?

கதாசிரியர் பாபா சாஹேப் புரந்தரே, “சிவாஜி மற்றும் மராத்தியர்களின் வாழ்வு தில்லியின் வரலாற்றோடு எவ்வாறு பிணைந்துள்ளது என்பதை நிகழ்கால சந்ததியினருக்கு விளக்க விரும்பினோம் ஆதலால் ஹிந்தியில் அரங்கேற்றுகிறோம்” என்கிறார். இம்முயற்சியில் டில்லி வாழ் மராத்தியர்கள் சங்கம், காலஞ்சென்ற மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, டாக்டர். எல்.வி.  சச்தினானந்த ஜோஷி, செயலர் உறுப்பினர். இந்திர காந்தி தேசிய கலை மையம், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அளத்த ஆதரவே தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்கிறார்.

கண்டோர் போற்றும் வண்ணம் 5 நாட்கள் மேடை நாடகம் ஜாம் ஜாமென்று நடந்தேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *