19/08/2020 இன்றைய விஜயபாரதம் மின்னிதழ்

 

எடப்பாயாரின் சிந்தனைக்கு

தி. மு.க  ஹிந்து விரோதக் கட்சி என்று தெளிவாகத் தெரிகிறது. கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கயவர்களுக்கு ஆதரவு கொடுத்த தி.மு.கவுக்கு எதிரான மனநிலையில் தான் ஹிந்துக்கள் உள்ளனர். இது வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கவே செய்யும்.  அ.தி.மு.கவின் தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ நெற்றியில் பளிச்சென்று விபூதி, குங்குமம் வைத்துள்ளனர். அ.தி.மு.க ஹிந்து விரோத கட்சி இல்லை. இருந்தாலும் தேவையில்லாமல் அ.தி.மு.க அரசு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தடை விதித்து ஹிந்துக்களின் விரோதத்தை சம்பாதித்துள்ளது. ஒரிஸாவில் பிரம்மாண்டமான பூரி ஜெகந்தாதர் ஆலய தேரோட்டத்திற்கே நீதிமன்றம் அனுமதி அளித்து சிறப்பாக நடைபெற்றதைப் பார்த்தோம். அதுமட்டுமல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்துவிட்டு விநாயகர் பூஜையை தடுத்திருப்பது ஹிந்துக்களின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பனியமாதா திருவிழா நடைபெற அனுமதி கொடுத்த தமிழக அரசு விநாயகர் பூஜையை மட்டும் தடுப்பது ஏன்? அ.தி.மு.க அவ்வளவு சுலபத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட  முடியாது. கடந்த தேர்தலில் ‘ஜெ’ இருந்தார். அவரது ஆளுமை இருக்கும்போதே தி.மு.க கூட்டணி 98 இடங்களை வரை பிடித்தது என்பதை எடப்பாடியார் நினைவு வைத்துக் கொள்ளட்டும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜையை தடை செய்வதன் முலம் ஹிந்துக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கோயிலில் அநாகரியம்
விருதாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்ப சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் அறநிலையத் துறையின்  கட்டுப்பாட்டில் உள்ளது. சில தினங்களுக்கு முன் அதன் ஊழியர்கள் கோயிலின் நந்தவனத்தில் புகை பிடிப்பது, மது குடிப்பது, மாமிசம் உண்பது என தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மான் கறி சாப்பிடலாமா என இவர்கள் பேசுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பானது. இந்த செயல் ஹிந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது.  இந்த செயலுக்கு கோயிலின் அறநிலையத் துறையே முழு பொறுப்பு என மக்கள் கருதுகின்றனர். ஹிந்து கோயில்களை அதில் நம்பிக்கை இல்லாதவர்கள், மாற்று மதத்தினர் எல்லாம் அறநிலையத்துறை எனும் பெயரில் நிர்வகிப்பதுதான் இந்த சீர்கேடுகளுக்கு எல்லாம் முக்கிய காரணம்.
குஞ்சன் கஞ்சேனா – குட்டு வெளியானது
கரன் ஜோஹர் தயாரிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான படம் குஞ்சன் சக்சேனா. முதல் பெண் விமானியின் கதையை ஒட்டி தயாரிக்கப்பட்ட படம் என சொல்லப்பட்டது. ஆனால் இதில் நம் பாரத விமானப்படை தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதை குறித்து விமானப்படையும் தணிக்கை வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தது. விமானப்படை வீரர்களும், வீராங்கனைகளும் கூட தங்களது கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பெண் விமானியே ‘‘படத்தில் காட்டியவாறு என்வாழ்வில் எதுவும் நடக்கவில்லை. என்னை அனைவரும் பாதுகாப்பாக நடத்தினர்” என கூறியுள்ளார்.
அவர்களுக்கு கொண்டாட்டம் நமக்கு 
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் ஊஹானில் மக்கள் தற்போது சந்தோஷமாக வாழ்வை கழிக்கின்றனர். அங்கு தற்போது முகக்கவசம் இல்லை. தனி மனித இடைவெளி இல்லை. ஷாப்பிங் மால், உணவு விடுதிகள், திரையரங்கம் எல்லாம் வழக்கம்போல செயல்படுகின்றன. ஆனால் அந்த கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளோ உயிரிழப்புகள், பொருளாதார சரிவு என இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை
மாணவனுக்கு மரியாதை
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் மகேஷ் எனும் மாணவன் 625-க்கு 616 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். இத்தனைக்கும் அந்த மாணவன் தாயுடன் இணைந்து கட்டட கூலி வேலை செய்து கிடைத்த நேரத்தில் மட்டுமே படித்து இந்த சாதனையை புரிந்துள்ளான். அந்த மாணவனை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார். மேற்படிப்பிற்கு தக்க உதவிகள் செய்வதாகவும் கூறியுள்ளார்.
பாரத ராணுவத்தில் நேபாளம் – குழப்பத்தில் சீனா
நமது பாரத ராணுவத்தில் தற்போது 28000 நேபாளத்தை சேர்ந்த கூர்கா ராணுவ வீரர்கள் பணியாற்றுகின்றனர். வருடம் தோறும் சுமார் 2000 பேர் இணைகின்றனர். நமது ராணுவத்தில் கூர்கா  ரெஜிமண்ட் என தனி பிரிவு கூட உள்ளது. இந்த நிலையில்  நேபாளிகள் ஏன் பாரத ராணுவத்தில் விரும்பி இணைகின்றனர் என குழம்பும் சீனா இதனை பற்றி விசாரிக்க தனி குழு அமைத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. நேபாள வீரர்களின் விஸ்வாசம் என்றும் சந்தேகத்திற்கு உரியது அல்ல. அவர்கள் உண்மையானவர்கள் என ஓய்வு பெற்ற லெப்டினட். ஜான் கூடா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 1887- பிறந்தார்.  தந்தை சமஸ்கிருத அறிஞர், வழக்கறிஞர். இவரும் சமஸ்கிருதத்தில் வல்லுநராகத் திகழ்ந்தார். நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர். சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930ல் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.‘ இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள். சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த ௬ ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள்,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன. சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936–ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939–ல் சென்னை மேயராகப் பணியாற்றினார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா ஆகியோரை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்தர எழுச்சியை ஊட்டினார். சென்னை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஒராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார்.