18/08/2020 இன்றைய விஜயபாரதம் மின்னிதழ்

விடை தெரியாத வினாக்கள்

இன்று  ஆகஸ்டு 18 இதே நாளில்தான் விமான விபத்தில் நேதாஜி பலியானார் என்ற செய்தி வெளியாகியது. ஆனால் இந்த விமான விபத்தில்தான்‌ காலமானார் என்பது உறுதி செய்யப்படவில்லை. நேதாஜி விமான விபத்தில் இறந்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை இன்றும் தொடர்கின்றது. நேதாஜியைக் கண்டால் அவரை உடனடியாகக் கைது செய்து  யுத்தக் குற்றவாளியாக்கி பிரிட்டிஷ்‌ அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக காந்திஜியும், நேருவும் பிரிட்டீஷாரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர் இந்தியாவிற்குள் வரவில்லை. ஆனால் எனக்கு அவர் இருக்குமிடம் தெரியும் என்று முன்பு முத்துராமலிங்க தேவர் தொடர்ந்து கூறிவந்தார். அன்னைத் திருநாட்டின் அடிமை நிலைமையைக் கண்டு ஆர்த்தெழுந்த நேதாஜி தான் பெற்ற ஜ.சி.எஸ் பட்டத்தைத் தூக்கி ஆங்கிலேயரின் முகத்தில் எறிந்து விட்டு விடுதலைப் போரில் குதித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரானார். காந்திஜி உட்பட அவரது சகாக்களுக்கு நேதாஜியின் தீவிரவாதம் பிடிக்கவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகினார். சுதந்திர பாரதத்தில் நேதாஜி மட்டும் இருந்திருந்தால் பாரதத்தின் இன்றைய சரித்திரமே மாறி அமைந்திருக்கும்.

பிறந்த குழந்தை கூட ‘அழுகை’
எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

இன்று நேதாஜி நினைவு நாள்

 

இதுதான் சகிப்புத்தன்மையா

பஹ்ரெய்னில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஹிந்து தெய்வங்களின் சிலைகளை அங்கு வந்த சில பெண்கள் உடைத்தனர். அது மட்டும் இல்லாமல் அந்த கடைக்காரரையும் அநாகரீகமாக திட்டியுள்ளனர். சகிப்புதன்மையற்ற இந்த காட்டுமிராண்டி செயலுக்கு பாரதத்தில் கண்டனங்கள் வலுத்துள்ளன. முன்னாள் எம்.பி தருண் விஜய்யும் இதற்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 54 வயதான பெண் ஒருவர் இது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என அந்த நாட்டு உள்துறை இதற்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமீர்கானின் தேசப்பற்று

சமீபத்தில் துருக்கிக்கு படப் பிடிப்பு சம்பந்தமாக அமீர்கான் சென்றுள்ளார். அங்கு அவர் துருக்கி அதிபரின் மனைவியை சந்தித்து பேசியுள்ளார். சமீப காலமாக துருக்கி நம் தேசத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிராக விமரிசனம் தெரிவித்திருந்தது துருக்கி. இங்குள்ள முஸ்லிம்களை இலவச சுற்றுலா எனும் பெயரில் அழைத்து சென்று நம் தேசத்திற்கெதிராக திருப்பி விடுகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ’யின் சொர்கபூமியாகவும் துருக்கி திகழ்கிறது. காங்கிரஸ் கட்சியும் 2019–ல் தன் வெளிநாட்டு அலுவலகத்தை அங்கு திறந்தது. இவற்றை அறிந்திருந்தும் அவரின் இந்த சந்திப்பு அவரின் தேசபக்தியின் அளவையே காட்டுகிறது. சில காலம் முன்பு பாரதத்தில் சகிப்புதன்மை இல்லை என பொய் சொல்லி தன் மத விஸ்வாசத்தை காட்டியவர்தான் இந்த அமீர்கான்.

காங்கிரஸ்தலைவரின்ஞானதோயம் 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார். அப்போது இந்திய சுதந்திரமும் காங்கிரஸும் நாணயத்தின் இருபக்கங்கள். சுதந்திரம் கொண்டுவர வேண்டியே காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனவே தேசியக்கொடி காங்கிரஸின் கொடியே என்றார். காங்கிரஸ் கொடிக்கும் தேசிய கொடிக்கும் வித்தியாசம் தெரியாத இவரின் ஞானம் அங்குள்ளவர்களிடம் சிரிப்பை வரவழைத்தது. முன்னதாக அவர் பேச்சில் தன் சொந்த கட்சி எம்.எல்.ஏ வீடு முஸ்லிம் ஜிஹாதி கும்பலால் தாக்கப்பட்டது, பொதுசொத்துக்கள் சேதம் குறித்து எதையும் பேசவில்லை.
மகா,அரசின் சிறுபான்மை கரிசனம்
மகாராஷ்டிர அரசின் சிறுபான்மைத்துறை அமைச்சர் நவாப் மாலிக் சமீபத்தில் டிவிட்டரில் ஒரு பதிவிட்டார். அதில் சிறுபான்மை மக்கள் காவல்துறையில் அதிகபட்ச பணியிடங்களை பெற வேண்டும். அதற்கு அரசு அவர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கும் என தெரிவித்து இருந்தார்.  இவர் முன்னதாக முஸ்லிம்களுக்கு ஐந்து சதவிகித ஒதுக்கீட்டை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதில் சிவசேனா தலைமையிலான அரசு ஈடுபடுவதை சொந்த கட்சியை சேர்ந்தவர்களே பலரும் எதிர்த்து வருகின்றனர். வங்காள முஸ்லிம்களின் நவகாளி வன்முறையை அப்போதைய முஸ்லிம் காவல்துறையினர் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரதன் பதில் 
முஸ்லிம்களின் சகிப்புதன்மை பற்றி ஒரு உதாரணம் சொல்லமுடியுமா?
மெயிலில் த.செல்லதுரை ,விழுப்புரம்
சிறிய பிரச்சனைக்கே பெங்களூரூவில் வன்முறை செய்த இவர்கள் சமீபத்தில் சீனாவில் மசூதி இடிக்கப்பட்டு அங்கே கழிப்பறை கட்டப்பட்டதை குறித்து வாய் திறக்கமாட்டார்கள்.
மங்கிவிட்டதாமனிதாபிமானம் 
மேற்கு வங்கத்திலிருந்து சமீபத்தில் வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அங்கு துர்நாற்றம் காரணமாக ஒரு சுடுகாட்டில் கொரோனா நோயாளிகளின் உடலை எரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அந்த உடல்களை அப்புறப்படுத்த  நகராட்சி பணியாளர்கள் கயிறு கட்டி தரையில் இழுத்து வந்து வண்டியில் ஏற்றினர். விஷயம் கொரோனாவா இல்லையா என்பதை பற்றி அல்ல. ஆனால் இறந்த ஒரு மனிதரின் உடலை சிறிதும் மரியாதை இன்றி இப்படி இழுத்து வருவது கண்டனத்திற்குரியது. வெட்கக்கேடானது. இதை அம்மாநில ஆளுனர் உட்பட பலரும் கண்டித்துள்ளனர்.