வலையில் தங்காத நண்டுகள் கொழுக்க வைத்த நண்டுகள்

பெங்களூரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அகண்ட சீனிவாச மூர்த்தி. இவர் பட்டியல் சமூகத்தவர். இவரது சகோதரி மகன் நவீனுக்கு ஹிந்து தெய்வத்தை இழிவுபடுத்தி யாரோ முகநூலில் ஒரு கார்ட்டூனை அனுப்பினார்கள். அந்த படம் பார்த்தால் எந்த சராசரி ஹிந்துவுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். நவீனுக்கும் கோபம் வந்தது. அதற்குப் பதிலடியாக முகம்மது நபி ஆயிஷா பற்றி ஒரு கார்ட்டூனை வெளியிட்டார்.
அவ்வளவுதான் முஸ்லிம்கள் பெருங் கூட்டமாகப் போய் ஆகஸ்டு 11 அன்று சட்டமன்ற உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இரண்டு காவல் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன. காவலர்கள் தாக்கப்பட்டார்கள். காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இரவு நேரத்தில் சுமார் 1,000 பேர் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டார்கள். சாலை ஓரம் நிறுத்தியிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அதேநாள் இரவு புனித சிருங்கேரி நகரில் சாலை சந்திப்பில்  ஆதி சங்கரர் சிலை மீது விஷமிகள் முஸ்லிம் கொடி போர்த்தினார்கள். இரண்டு முஸ்லிம்களை காவல்துறை கைது செய்தது. பரவலாக கலவரம் தூண்டும் சதியா? கலவரக்காரர்கள் பெங்களூரு போலீஸ் நிலையத்தை தாக்கியது ஏன்? இந்த கலவரத்தின் சூத்திரதாரிகள் யார்? அரசு விசாரிக்க வேண்டும். கலவரத்திற்குக் காரணமான எஸ்.டி.பி.ஐ (பி.எப் ஐ என்ற முஸ்லிம்அமைப்பின் அரசியல் கட்சி) தடை செய்யப்பட வேண்டும். உ.பி. அரசு போன்று பொதுச்சொத்துக்கு சேதம் விளைத்தவர்களை கண்டுபிடித்து அவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வீடு மீது மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றுள்ளது. எந்த காங்கிரஸ் தலைவர்களும் கண்டிக்கவில்லையே ஏன்? ஒரு பட்டியல் சமூகத் தலைவர் வீடு தாக்கப்பட்டுள்ளது. எந்த பட்டியல் சமூகத் தலைவரும் ஏன் கண்டிக்கவில்லை?
கலவரம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான் ஒரே காரணமா? பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்ற கர்நாடக மாநில உள்துறை அமைச்சரின் அறிவிப்பு சற்றே ஆறுதல் தருகிறது. ஆனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம்? படுகாயப்படுத்தப்பட்ட 60 காவலர்களின் கதி?