ஹிந்து பெரும்பான்மையால் பாரதம் மதச்சார்பற்றது

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியா டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் (ஹிந்து மதம்) பிற மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது ஆபத்து காலங்களில் பாதுகாப்பு அளித்துள்ளனர். நாங்கள் அதை எங்கள் கடமை என்று பார்க்கிறோம். சனாதன தர்மத்தை ஒரு வழிபாட்டு முறையாக நாம் பார்க்கவில்லை. வழிபாட்டு முறைகள் வித்தியாசமாக இருக்கலாம், அது வேதம், ஜைனம், பௌத்தம் அல்லது சீக்கிய மதமாகவும் இருக்கலாம். பாரதம் மதச்சார்பற்றதாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஏனெனில், அது ஹிந்து பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இது அனைவருக்கும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பாரதம் வசுதைவ குடும்பகத்தை நம்புகிறது. அதை தனது வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளில் என்ன நடக்கிறது? உலகில் இதுபோன்ற பல நாடுகளில், பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுகின்றன, அங்குள்ள சிறுபான்மையினர் முற்றிலுமாக அழிக்கப்படுகிறார்கள், ஆனால் இதுகுறித்து யாரும் அங்கு பேசுவதில்லை. ராமாயணத்தில், சனாதன தர்மத்திற்கு ஒரு சிறிய வரையறை உள்ளது. பகவான் ஹனுமான் இலங்கையை நோக்கிச் செல்லும் போது, அவர் மைனக் மலையில் நின்று ஓய்வெடுக்கச் சொன்னார். அது ராமாயணத்தில் ‘கிருதே ச ப்ரதிகிருதவ்யமேஷ தர்ம சனாதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செயல்களே சனாதன தர்மம்” என கூறினார்.