ஹிந்துவாக மாறிய முஸ்லிம் பெண்

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த சபா என்ற முஸ்லிம் பெண், ஹிந்து மதத்தை சேர்ந்த  அங்கூர் தேவல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தாய்மதமான ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். ஹிந்து மதத்தைத் தழுவிய பிறகு, சோனி என்று பெயரை மார்றிக்கொண்டார். பிப்ரவரி 3, வெள்ளிக்கிழமை அண்று ஹிந்து முறைப்படி பரேலியில் உள்ள அகஸ்திய முனி ஆசிரமத்தில் தனது ஹிந்து காதலரான அங்கூர் தேவலை கரம் பிடித்தார். 21 வயதான சபா தனது காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவரது தந்தை, அங்கூர் தேவல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மைனர் பெண்ணை கடத்தியதாக பொய்யாக ஒரு கடத்தல் வழக்கு பதிவு செய்தார். ஆனால் சபா, தனது தந்தையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தனது மதம் மாறிய திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டது அல்ல. தான் ஒரு மேஜர், விரும்பும் நபரை தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறினார். மேலும், தனக்கும் அவரது கணவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது குடும்பத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறி காவல் துறையில் பாதுகாப்புக் கோரினார். மேலும், ஹிந்து மதத்தில் முத்தலாக் என்ற கருத்து இல்லாததால், ஹிந்து மதத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் ஹிந்து தெய்வங்களை வழிபடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தனது வாழ்நாள் முழுவதையும் தனது கணவருடன் கழிக்க விரும்புவதாகவும் சபா என்ற சோனு கூறினார். அவர்களது திருமண விழாவின் போது உடனிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி, புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.