ஸ்ரீ பிரம்மாநந்தர்

* எப்போதும் விழிப்புடன் இருங்கள்.
* பேரின்பத்தை முழுமையாகப் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
* உங்கள் செயல்களை ஒருபோதும் தள்ளிப் போடாதீர்கள். மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
* மனம் கடவுளை உணரும்போது, அது அங்கே நிரந்தரமாக இருந்துவிடும். மற்ற விஷயங்களை அது விரும்புவதில்லை.
* தன்னை உணர்ந்த ஒருவர், இந்த உலகை கையில் வைத்துள்ள ஒரு பழம் போல் உணர்கிறார்.
* கடவுளின் அருள் சிறிதளவு இருந்தால்கூட அது ஆன்மாவை முழுவதுமாக உணர போதுமானது.
* நீங்கள் எங்கிருந்தாலும், மனம் உங்களுடன் எப்போதும் இருக்கும். எனவே மற்ற உலகியல் விஷயங்களில்
அதனை செலுத்தாதீர்கள். நித்திய பிரம்மத்துடன் உங்கள் மனதை இணைத்திடுங்கள். இந்த பிறவியை வீணாக்க வேண்டாம். முழுமையாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
* ஆன்மீக போதனைகள், உன் சுயத்தில் ஒளியை ஏற்ற முடியாது, ஏனெனில் சுயமே ஒளி.
* நம்முடைய அன்றாட விவகாரங்களில், நல்ல செயல்களுக்கும் தெய்வீகம் தொடர்பான
விஷயங்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும். தவறான நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படவேண்டும்.
* நாம் பரமாத்மாவுடன் ஒருபோதும் தூரத்திலோ, பிரிந்தோ இல்லை.
* நீங்கள் வாழும்வரை நிம்மதியாக வாழுங்கள்.

* தேவனாக பிறப்பதைவிட மனிதனாகப் பிறப்பது அதிர்ஷ்டமானது.
* யோகாசனத்தால் தெய்வீகத்தை உணர முடியும்.
* உங்களை ஒருபோதும் பலவீனமாக, தாழ்ந்தவராக கருத வேண்டாம்.