உலக குத்துசண்டையில் ஆபாரம்

ஜெர்மனியில், உலக கோப்பை குத்துச்சண்டை நடந்தது. பெண்களுக்கான 80 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் ஜெர்மனியின் மாயா கிளின்ஹான்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய சிம்ரன்ஜீத் கவுர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

பெண்களுக்கான 57 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷா 3-2 என, சகவீராங்கனை சாக்சியை தோற்கடித்து தங்கத்தை வென்றார். சாக்சிக்கு வெள்ளி கிடைத்தது.