விவசாய போராட்டம் – மக்கள் எதிர்ப்பு

டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். ‘விவசாயிகள் போராட்டம் காரணமாக உள்ளூர் மக்கள் நடமாட இடையூறு ஏற்படுவதுடன் அப்பகுதி கடைகளில் விற்பனை பாதிக்கப்படுவதாகவும்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் தடுப்பையும் மீறி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளை நோக்கி கம்பு, கற்களை வீசி விவசாயிகளை விரட்டியடிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சிங்கு பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கு பகுதி மக்களை கலைந்து செல்லுமாறு தடியடி நடத்தி விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.