நிதித்துறையில் நிறுவன செயல்பாடுகள்

பாரத நிதித் துறைகளில், ‘முகநூல், கூகுள், அமேசான்’ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, விரிவான சட்ட கட்டமைப்பை வகுக்கவேண்டும் என்று ரேஷ்மி பாஸ்கரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு பதிலளித்து, உயர் நீதிமன்றத்தில், ரிசர்வ் வங்கி, நேற்று, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் பாரதத்தின் நிதித் துறைகளில்,இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் சட்டப்படி ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல், ‘செபி’ எனப்படும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘சந்தை தரவு பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை பரிந்துரைக்க, ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என, கூறப்பட்டுள்ளது.