பாகிஸ்தான் சிவன்கோயில் திறப்பு

பாகிஸ்தான், சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில், புனரமைப்புக்கு பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட, கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்ற அந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக, அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டு கோயிலுடன் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்களைக் கவனிக்கும் அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் அமீர் ஹஸ்மி தெரிவித்தார். மேலும் அந்த கோயிலின் நிர்வாகம், ஓர் உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாகிஸ்தான் முழுவதும் பல ஹிந்து கோவில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில், சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோயிலும் அடங்கும். பெஷாவரில் உள்ள ஹிந்து கோயில்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது என்று அமீர் ஹஸ்மி தெரிவித்தார்.