ரோட்டோர கடைகளுக்கு கடன்

கொரோனாவுக்கு பிறகு தெருவோர விற்பனையாளர்களுக்கு கடன் கிடைக்காத சூழல் உள்ளது. கந்துவட்டி கொடுமைகளும் நடக்கின்றன. இவர்களின் வாழ்வை மீண்டும் மலர செய்ய, மத்திய அரசு பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குகிறது. பாரதத்தில் தெருவோர கடை உணவுகள் உலக பிரசித்தம். அதை ஊக்குவிக்கவும், சுத்தம் சுகாதாரம் பேணவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த ஒரு தெருக்கடையும் இனி எளிதாக FSSAI லைசன்ஸ் பெறலாம். தேசிய வீதி விற்பனையாளர் சங்கம் (நாஸ்வி) ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்த தகவல்களை வீட்டுவசதி, நகர்புற இணை செயலாலர் சஞ்ஜய் குமார் தெரிவித்தார். எல்லாம் சரி, பிரியாணி பாக்சர்கள், கடப்பாக் கல் திருடர்கள், தோசைக்கு அடிதடி செய்பவர்களிடம் இருந்து இவர்களை காப்பது யார் !?