முரண்பாடுகளின் முத்துமாலை புதிய சட்டம் தெரியாத தலைவர்! அரிச்சுவடி படிப்பவர் அறிக்கை

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம் நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுகிறாரே, ஆர்பாட்டம் செய்பவர்கள் முஸ்லிம்கள் என்பதை மறைக்கிறார்.

பாரதம் அகதிகளாக இருப்பவர்களுக்கு எதிரானது கிடையாது. சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்கள் பற்றியது புதுச்சட்டம். பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள்,சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள், அரசாலும், இஸ்லாமி யர்களாலும் துன்புறுத் தலுக்கு  உள்ளாகி பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பாதுகாப்பு கருதி வந்தார்கள்.  அவர்களுக்கு குடியுரிமை வழங்க திருத்தப்பட்ட சட்டம் இது என்பதை மறந்து விட்டு, ஒரு புது விளக்கத்தை ஸ்டாலின் கொடுக்கிறார்.   அகதிகள் யார் என்பதற்கு 1951-ம் வருட ஐ.நா.வின் வரையறுப்பு இது:

”அகதிகள் என்பவர்கள்,  இனம், மதம், தேசியம், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு உறுப்பினர் அல்லது அரசியல் கருத்து சார்பு ஆகியவற்றின் காரணமாக, துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக ஒரு நபர் தனது தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பவர் அகதி.”   1955ல் பாரதத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் எங்கேயும் அகதி என்ற வார்த்தை வரவில்லை.  குடியுரிமை சட்டம் என்பது,  இந்தியாவில் யார் குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்குரிய விளக்கங்கள் அடங்கிய சட்டம்.பல முறைகளில் திருத்தப்பட்டது.  கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் ஹிந்துக் களுக்கு எதிராக இருந்தது.  அப்பொழுது இவர்கள் ஏன் கூச்சல் போடவில்லை   இந்தியாவில் வாழ்கின்ற சிறுபான்மையினரான   முஸ்லிம்களுக்கு  ஒரு ஆபத்தும் கிடையாது என்று தெளிவாகத் கூறிய பின்னரும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடையாது என ஆர்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?   குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலிருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என நேரடியாக கோரிக்கை வைப்பதற்கு பதிலாக, தி.மு.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச் சினையை முன் வைத்து வாதம் செய்கிறார்கள்.   இதில் கவனிக்க வேண்டிய அம்சம்,  நாங்கள் ஹிந்துக்கள் கிடையாது, தமி ழர்கள் என கூச்சலிட்ட தி.மு.க.வினர், தற்போது இலங்கை தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்!

   முஸ்லிம்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்த  அகதிகளுக்கு குடியுரிமை வழங்கலாம்  என இந்தச் சட்டம் சொல்கிறதே  முஸ்லிம் புறக்கணிப்பு ஏன் என்ற கேள்வியை ஸ்டாலின் எழுப்புகிறார். மேற்படி மூன்று நாடுகளிலும் அரசின் அதிகாரபூர்வமான மதம் இஸ்லாம்.  இந்த நாடுகளில் இஸ்லாமை பின்பற்று பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருக்கிறது.  இதன் காரணமாக அந்த நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் மத ரீதியான அடக்குமுறைக்கும், ஒடுக்கு முறைக்கும் ஆளாகும் நிலை உருவாகாது.    அந்த மூன்று நாடுகளிலும் சிறுபான்மை மக்களை துன்புறுத்தி, கட்டாய மத மாற்றம் செய்வது, இவற்றை நடத்தியவர்கள்   அந்த நாட்டு முஸ்லிம்கள் என்பது புரியாமல்தான்  பேசுகிறாரா?

வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வரலாம் எனச் சொல்லுகிறார்கள், அப்படி என்றால் இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க. இழைக்கிற  மாபெரும் துரோகம்! என ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.   அரசியலில் அரிச்சுவடி படிக் கும் ஸ்டாலினுக்கு ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்ட வேண்டும்.  2009 அக்டோபர் 1ந்  தேதி காஞ்சிபுரத்தில் முப்பெரும் விழா நடத்திய போது, அதில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானம்  இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதாகும்.

இது சம்பந்தமாக அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அக்டோபர் 4ந் தேதி தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.  இது சம்பந்தமாக டி.ஆர்.பாலு மூலமாக கருணாநிதி எழுதிய கடிதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவி திருமதி சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் வழங்கப்பட்டது.

 2005-ல் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஏன் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரவில்லை.  இன்று அ.இ.அ.தி.மு.க. இலங்கை தமிழர்களுக்கு பச்சை துரோகம் இழைத்து விட்டதாக கூறும் ஸ்டாலின் ஏன் அப்பொழுது தி.மு.க. மத்திய அரசை நிர்பந்தப்படுத்தவில்லை.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம்,  காங்கிரஸ் கட்சி, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தால், நி்ச்சயமாக இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கும் என்று பேசியது தான் கூத்து.வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக  நுழைந்த இஸ்லா மியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என கூச்சலி டுகிறாரே டால்மியா என்ற   வடமாநிலத்தவரின் பெயரால் தமிழகத்தில் ஓர் ஊர் இருக்க கூடாது என போராட்டம் நடத்திய கட்சி இவர் கட்சி என்பதை யாரும் மறந்து விடவில்லை!

   தி.மு.க.வினர் நடத்தும் நாடகத்தில், சில கேள்விகள் எழுகின்றன.  தமிழகத்தில் பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்த வர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம், கரூர் போன்ற தொழில்கள் நிறைந்த வட்டாரங்களில் குறைந்த கூலிக்கு ஆட்களாக இருப்பதால், தேச நலனை புறக்கணித்து விட்டு, சொந்த லாபத்தை பார்க்கும் தொழில் அதிபர்கள் உள்ளுர்காரர்களை புறக்கணித்து விட்டு, பங்களா தேஷ் நாட்டினரை வேலைக்கு வைத்துள்ளார்கள்.

 வட மாநிலத்தவர் ஆதிக்கத்தால், தமிழருக்கு வேலை கிடைக் கவில்லை என கூச்சல் போடும் ஸ்டாலின், பங்களா தேஷ் முஸ்லிம்களால் உள்ளுர் தமிழனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதையாவது புரிந்து கொள்வாரோ?

முஸ்லிம் ஓட்டுக்காக அலையும் ஸ்டாலின், சட்டதிருத்தத்தை முழுமையாக படித்து விட்டு,  பிறகு பேசட்டும்.