திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.
முப்பத்து முக்கோடி தேவர்கள் என்கிற சொலவடை தென்பகுதிகளில்  ப்ரசித்தம. அத்தகைய  தேவர்களுக்குத் துன்பம் வரும்முன்பே சென்று
அவர்களின் நடுக்கத்தை போக்கும் கலிய மூர்த்தியே!..் வீரனே எழுந்திரு!
கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்கு(செப்ப  முடையார் )
பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு.
தங்க கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை
உடைய நப்பின்னை  பிராட்டியே!, திருமகளே! எழுந்திரு.
விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து
எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.