திருவெம்பாவை – 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
     – மாணிக்கவாசகர் பெருமான்
சிவபெருமானே!உலகிலுள்ள அனைத்துப் பொருள்கட்  கும் முதலாவதான  நின் பாதமலர்களை வணங்குகிறோம். உலகிலுள்ள எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள   தன்மையினையும் வணங்குகிறோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களைச் சரணடைகின்றோம்.
 எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளைப் பிரார்த்திக்கிறோம்.   திருமாலாலும்,நா ன்  ் முகனனா  பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு  பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளைப் பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.