வார ராசிபலன் – விகாரி வருடம், மார்கழி 20 முதல் மார்கழி 27 வரை( டிசம்பர் 05 – 12) 2019

மேஷம்:

முன்னிலை வகிக்க விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் ஆதரவால் பணியில் இருந்த பதட்டம் விலகும். விரும்பியபதவியும், இடமும் கிடைக்கப் பெறுவீர்கள். சேமிப்பில் அதிக கவனம் செல்லும். வாகனம், வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள்.
பெண்மணிகள்: உடல் உபாதைகள் நீங்கி, சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிறந்த வீட்டு சொந்தங்களால் ஆதரவு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
மாணவ மணிகள்: நினைவாற்றல் அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறும். சிலருக்கு கண்நோய் வந்து விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
சிறுதொழில், வியாபாரம்: புதிய திட்டங்களை செயபல்டுத்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றிக்கொள்ளலாம். சுறுசுறுப்பாக பணியாற்றுங்கள்.
அரசியல்வாதிகள்: தலைமையில் ஆதரவால் புதிய பதவி கிடைத்து சிறப்பாக பணியாற்றுவீர்கள். விரோதம் தவிர்த்து நட்பை பேணவும்!

ரிஷபம்:

 

பொறுமையுடன் செயல்படும் ரிஷ ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம், பணி மாற்றம் ஏற்படும். வேலை பளுவும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவும் கூடும்.
பெண்மணிகள்: அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது. குடும்பப் பிரச்சினைகளில் இல்லறத் துணை வழியே சமாளிக்கவும். ஆரோக்கியத்தை பேணவும். ஆன்மிக எண்ணங்களால் நிம்மதி கிடைக்கும்.
மாணவ மணிகள்: விருப்பமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சந்திப்புகளால் சந்தோஷம் நிலவும். போட்டிகளில் வெற்றி உண்டு. கல்வியில் முன்னேற்றம்                                                                                                                                                    சிறுதொழில், வியாபாரம்: எண்ணி காரியம் கை கூடும். புதியவர்களால் திட்டங்கள் செயல்படுத்துவீர்கள். வளர்ச்சிக்கு
ஏற்றபடி வருமானம் உண்டு.
அரசியல்வாதிகள்: தலைமையின் சொற்படி செயலாற்றி நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ளவும்.

சிம்மம்:

 

 

உலகியல் அறிவுமிக்க சிம்மராசி அன்பர்களே! உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களால் ஏற்பட்ட சலசலப்புகள் விலகும். தடைகள் விலகி ஊதியம், பணி உயர்வு ஆகியவை கிடைக்கும். உற்சாகமாக செயல்படுங்கள், பயணம் நன்மை தரும்.
பெண்மணிகள்: குடும்பத்தில் சுப காரிங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டு ஆதரவு கிடைக்கும். உங்கள் பெயரில் சொத்துகள் வாங்கலாம்.
மாணவ மணிகள்: போட்டி, பந்தயங்களில் விருப்பம் ஏற்படும். சிலருக்கு பரிசும் கிடைக்கும். கல்வியில் விருப்பம் உண்டாகும். சிலருக்கு வேலை கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் புதிய உத்திகளை புகுத்துவீர்கள். வருமானம் உண்டு, வளர்ச்சி உண்டு. பங்குதாரர்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகள்: தங்களின் செயல் திறனால் நற்பெயர் கிடைக்கும். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும். நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!

கன்னி:

 

அன்புக்கு கட்டுப்பட்ட கன்னிராசி அன்பர்களே! உத்தியோகஸ்தர்கள்: அனைத்து தரப்பினரிடத்திலும் மென்மையாக பழக வேண்டும். சிலரின் நட்பை விட்டு விலகியிருக்க வேண்டும். அதிகாரிகளின் பாராமுகமும், சக ஊழியர்களின் பேச்சும் மன வருத்தத்தை தந்தாலும் கருத்து தெரிவிக்க வேண்டாம்.
பெண்மணிகள்: இல்லறத் துணையின் எண்ணங்களுக்கு மாற்று கருத்து சொல்ல வேண்டாம். உடல் நிலை பாதிப்பு ஏற்படும். சகோதரர்களால் நன்மை உண்டு. செலவுகளை கட்டுப்படுத்தவும்.
மாணவ மணிகள்: ஆசிரியரின் உதவியுடன் மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வேலைகக்கான உத்தரவாதமும் கிடைக்கும். பகுதி நேரக் கல்வி பலன்தரும்.
சிறுதொழில், வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஊழியர்களின் செயலால் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள்: சக கட்சி நண்பர்களால் பிரசச்சினை ஏற்படும். மதி நுட்பத்துடன் சமாளிக்க வேண்டும்.
துணிச்சலுடனும் விவேகத்துடனும் செயல்படுங்கள்!

மிதுனம்:

 

 

புதுமையை ஏற்றுக்கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள்: பணியில் கவனமின்மையாக இருந்த மனநிலை மாறும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்பட்ட பின்னடைவுகள் மாறும். பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயலாற்றுவீர்கள். அதிகாரிகள், சக ஊழியர்களால் நன்மை உண்டு.
பெண்மணிகள்: இல்லறத்துணையின் அன்பால் மனம் மகிழ்வீர்கள். இளம் பெண்களுக்கு திருமணக் கனவுகள் களிப்புத் தரும். வாகனச் செலவு ஏற்படலாம். கருத்து வேறுபாடு நீங்கி குடும்பம் சிறக்கும்.
மாணவ மணிகள்: கல்வி குறித்து கவலை உண்டாகும். உயர் கல்விக்கு தேவையான தகவல் திரட்டுவீர்கள். பாடங்களில் விருப்பம் அதிகரிக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களின் செயல்களில் வார இறுதியில் நல்ல மாற்றம் நிகழும். தனவரவு உண்டு. வரி சம்பந்தமாக கவனம் தேவை.
அரசியல்வாதிகள்: உழைப்புக்கு ஏற்ற ஆதரவு அதிகரிக்கும். தேவையானவர்களை கேட்கும்போது உதவுங்கள்!

கடகம்:

 

பாசத்திற்கு கட்டுப்பட்ட தனுசு ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: செயலாற்றல் அதிகரிப்பால் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். ஊக்கத் தொகை கிடைக்கும். சக ஊழியர்களின் செயலைக் கண்டு கலங்காதீர்கள். நட்பை விட்டுவிடாதீர்கள். இங்கிதம் இனிய பேச்சு அவசியம் தேவை.
பெண்மணிகள்: குழப்பமான மனநிலையை தவிர்க்கவும். நேர்மறை கருத்துக்களைக் கூறுவும். வாரிசுகளுக்காக திட்டமிடுவீர்கள். ஆரோக்கியம் மேன்படும். இல்லறம் இனிமை தரும்.
மாணவ மணிகள்: போட்டி, பந்தயங்களில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். விடுமுறை தினங்களை வீணடிக்காதீர்கள். புத்துணர்ச்சியுடன் செயல்படவும்.                                                                                                                                                                               சிறுதொழில், வியாபாரம்: பொருளாதாரம் வளரும். சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களை கவனித்து அவர்களின் பணித்திறனை ஆராயவும்.
அரசியல்வாதிகள்: தொண்டர்களை அரவணைத்து, தலைமையின் கவனத்தை கவருங்கள். குடும்பத்தினரின் நலனில் அக்கறை காட்டுங்கள்!

துலாம்:

ஆளுமைத் திறனுடைய துலா ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் ஆதரவு உள்ளதால், விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயமும் இருக்கும். முக்கிய கிரகங்களின் மூன்றாமிட சஞ்சாரம் முன்னேற்றம் தரும். நண்பர்களால் சகாயம் உண்டு.                                                                                                                                                                                                            பெண்மணிகள்: ஆரோக்கியம் அதிகரிக்கும். புராதன ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். இல்லறம் சிறந்து விளங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். மாணவ மணிகள்: உயல்கல்விக்கு வழி கிடைக்கும். விளையாட்டுகளிலும், பாடத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்விக்கான திட்டங்களை இப்போதே செய்திடுங்கள். சிலருக்கு வேலை தேடி வரும்.
சிறுதொழில், வியாபாரம்: ஒப்பந்தங்கள் நிறைவேறும். புதிய இயந்திரங்கள் வாங்கி, தொழிலை விருத்தி செய்வீர்கள்.
அரசியல்வாதிகள்: தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அலைச்சல் இருக்கும், வளர்ச்சியும் உண்டு.

விருச்சிகம்:

நடுநிலையான சிந்தனையுடைய விருச்சிக ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: பொறுப்புடன் பணியாற்றினாலும், விருப்பமான ஊதிய உயர்வு
கிடைக்காது. அதேசமயம், சக ஊழியர்களின் இடமாற்றம் நிம்மதி தரும். செல்வாக்கு உயரும்.
உபரி வருமானம் தெம்பு தரும். சமயோஜிதத்தால் வசதி அதிகரிக்கும்.
பெண்மணிகள்: குடும்ப உறவுகளில் இருந்த பிணக்கு நீங்கி நல்லுறவு ஏற்படும். இளம் பெண்கள்
புதிய வாழ்க்கைக்கு முயற்சி செய்வீர்கள், தோழிகளால் நன்மை உண்டு.
மாணவ மணிகள்: மதிப்பெண் குறைந்த பாடங்களில் வெற்றியை காண்பீர்கள். உயர் கல்வியில்
நாட்டம் ஏற்படும். சிலருக்கு பணியும் கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: புதிய முதலீடு தவிர்க்கவும். சொத்துகளை வாங்கும்போது விசாரித்து
முடிவு எடுக்கவும். விற்பனை அதிகரிக்க ஆலோசனை பெறவும்.
அரசியல்வாதிகள்: அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள சில மாற்றங்களை செய்வீர்கள். வழக்குகளை
ஒத்திப்போடவும்.
உணர்ச்சியை கட்டுப்படுத்துங்கள்!

தனுசு:

கோபத்திலும் குணம் மாறாத தனுசு ராசி அன்பர்களே! உத்தியோகஸ்தர்கள்: அதிக வேலை அயர்ச்சித்தரும். சக ஊழியர்களின் உதவியுடன் பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். குழப்பமான மனநிலையில் முக்கிய முடிவுகளை ஒத்திப்போடவும். பொருளாதாரம் குறையாது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
பெண்மணிகள்: குடும்பத்தினரின் விருப்பத்தின்படி சில விஷயங்களில் விட்டுக்கொடுப்பீர்கள். இல்லறத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நகை, செல்போன், பணம் ஆகியவற்றை கவனமாக கையாளவும்.                                    மாணவ மணிகள்: கல்வியில் தொய்வு உண்டாகும். பொது விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். கல்வியில் அதிக கவனம் தேவை.
சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சி உண்டு. சிற்சில தவறுகளால் அரசாங்கத்தின் கெடுபிடிக்கு ஆளாகாமல் இருங்கள்.
அரசியல்வாதிகள்: வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்.
கடின உழைப்பாளிக்கு உறுதுயாக இருங்கள்!

மகரம்:

அனைவரையும் சமமாக பாவிக்கும் மகர ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும். பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு கிடைக்கும். எதிர்பாரத சில சுப நிகழ்ச்சிகளும் நடைபெறலாம். அதே சமயம் பொய் வாக்குறுதி தருபவர்களின் எச்சரிக்கை தேவை. பதவி உயர்வும் கிடைக்கும்.
பெண்மணிகள்: தெளிவான சிந்தனையுடன் இருப்பதால் முகம் மலர்ச்சியுடன் காணப்படும். தடைபட்டநற்காரியங்கள் இனி நடைபெறத் துவங்கும். சுப நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் பணிகள் அதிகரிக்கும்.
மாணவ மணிகள்: கல்வியில் மேன்மை பெறுவீர்கள். சக மாணவர்கள் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வேலையும் நாடி வரும். உறவினர்களால் உதவி உண்டு.
சிறுதொழில், வியாபாரம்: நிலுவைத் தொகைகள் கிடைக்கும். எதிர் பார்ப்பு அளவு ஏற்றம் கிடைக்கும். முதலீடு தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள்: எதிரிகள் விலகுவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். சிறந்தவர்களை உதாரணமாக கொள்ளுங்கள்!

கும்பம்:

உயர்ந்த லட்சியங்களை கொண்ட குடும்ப ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: பணியிடத்தில் சிலர் இடமாற்றம் பெறுவதால் உயர் பதவி பெறுவீர்கள். இடர்கள் நீங்கி மனநிம்மதி பெறுவீர்கள். அதிக ஊதியமும் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். ஊக்கத் தொகை கிடைக்கும். பணி பளு குறையும்.
பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு வரன் அமைய வாய்ப்புள்ளது. சிலருக்கு தாய்மை பேறு பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இனிய சூழல் அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவ மணிகள்: உறவினர் உதவியால் உயர் கல்வி, வேலை கிடைக்கும். ஆசிரியர் சக மாணவர்களின் உதவியுடன் மேன்மையான மதிப்பெண் கிடைக்கும்.                                                                                                                                            சிறுதொழில், வியாபாரம்: வங்கிக் கடன் பெறலாம். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முனையவும்.
அரசியல்வாதிகள்: ஆதரவு பெருகும். வருமானம் அதிகரிக்கும். நேர்மையானவர்களை கண்டு கொள்ளுங்கள்!

மீனம்:

கொள்கையில் தீவிரம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள்: வேலைச்சுமை, உடல் நிலை, பயணங்களால் உடல் அசதி ஏற்படும். இனி
அலைச்சல் குறையும், அத்தியாவசியமான வேலைகளை பட்டியலிட்டு, முன்னிலைக் குறித்து
பணியாற்றவும். சக ஊழியர்களுடன் சகஜமாகப் பழகவும். விமர்சனம் தவிர்க்கவும்.
பெண்மணிகள்: புகுந்த வீட்டினருடன் இணக்கத்துடன் பழகவும். வாரிசுகளின் எதிர்காலம் குறித்து
கவலை ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். சிலருக்கு வரன் அமையும்.
மாணவ மணிகள்: உயர் மதிப்பெண் கிடைக்க அதிக கவனம் தேவை. தடைகள் நீங்கி,
செயல்திறன் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் நன்மை உண்டு.
சிறுதொழில், வியாபாரம்: நிர்வாகத்திறன் அதிகரிப்பதால் சில நடவடிக்கைகள் எடுப்பீர்கள்.
பங்குதார்களால் நன்மை உண்டு.
அரசியல்வாதிகள்: நேர்மையான செயல்களில் ஈடுபடுங்கள்
நம்பிக்கையாளர்களுக்கு உதவுங்கள்!